இலங்கையில் மேலும் அதிகரிக்கும் பொருட்களின் விலை !

எதிர்காலத்தில் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயரும் என்று சந்தைப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
விசேடமாக உர நெருக்கடி காரணமாக உள்ளூர் விவசாயப் பொருட்களின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது உணவுப் பணவீக்கத்தை அதிகரிக்கும் காரணியாகும்.

Panoramic food background with assortment of fresh organic vegetables

தற்போது வரையிலும் உர பிரச்சினை காரணமாக நெல் உற்பத்தி மற்றும் மரக்கறி உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என விவசாய வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணிற்கமைய, உணவுப் பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 22.1 சதவீதமாக உயர்ந்துள்ளது, முந்தைய மாதத்தில் 17.5 சதவீதமாக இருந்தது. அது முன்னரை விட தற்போது வரையில் வேகமாக அதிகரித்துள்ளது.

எதிர்காலத்தில் மரக்கறி உற்பத்தி குறைவதால் சந்தைக்கு வரக்கூடிய மரக்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்வதற்கு வாய்ப்புள்ளதால் உணவுப் பணவீக்கம் மேலும் உயரும் அபாயம் உள்ளதாகவும் சந்தைப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.