உங்கள் வாழ்கையை ஆரோக்கியமிக்கதாக மாற்றிக் கொள்ள தினமும் இதைச் செய்து வாருங்கள்! மாற்றம் நிட்சயம்.!

நன்றி எழுதுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையை உங்களாலேயே மாற்றிக் கொள்ள முடியும். அதாவது ஈர்ப்பு விதியில் முதலாவது கட்டம் இதுதான். நாங்கள் எப்பவும் வாழ்க்கையில் இல்லாத விடயம் பற்றி குறை சொல்லிக்கிட்டே இருப்போம்.

ஆனால், நம்ம வாழ்க்கையில் இருக்கின்ற விடயங்களுக்கு நன்றி சொல்லுவது இல்லை. வாழ்க்கையில் எப்பவும் குறை சொல்லிக்கிட்டே போனால் எந்த மாற்றமும் நடக்காது. ஆனால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு நல்ல விடயங்கள் அமையப் பெற்றிருக்கின்றது என்பதை சிந்தித்து அதுக்கு முதலில் நன்றி சொல்லிப் பாருங்கள்.ஒரு புத்தகத்தில் எழுதுங்கள். நீங்கள் எழுதும் போது அது உங்கள் மனதில் ஆழமாகப் பதியும். இதனால் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் நடக்கிறதை உங்களாலேயே உணர முடியும். நினைக்கிற விடயங்கள் எளிதில் கிடைத்துவிடும். வாழ்க்கை ஒரு சமநிலை அடையும். எப்பொழுதும் சந்தோசமாக இருப்பீர்கள். எழுத ஆரம்பித்து ஒரு பத்து நாட்களுக்குள் ஏதாவதொரு மாற்றம் நடக்கும்.நன்றியினை எழுதும் போது உணர்வுபூர்வமாக எழுதுவது முக்கியம். ஒருநாள் 15 வரியில் நன்றியினை எழுத வேண்டும். காலையில் எழுந்தவுடன் எழுதுவது மிகவும் நல்லது.உதாரணம் : தினமும் கிடைக்கும் உணவிற்கு நன்றி, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நன்றி,தினமும் கிடைக்கும் செல்வத்திற்கு நன்றி, எனக்கு உதவூம் உறவூகளுக்கு நன்றி
கண்டிப்பாக இதை 30 நாட்களுக்குத் தொடர்ச்சியாக செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் கிடைத்த மாற்றத்தை கீழே  அறியத்தாருங்கள்.