நிதியமைச்சர் பசில் ராஜபக்ச பணம் அச்சடிக்கும் இடத்தை கண்டுபிடித்த மைத்திரி!

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa) பணம் அச்சடிக்கும் இடத்தை முன்னாள் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena)கண்டு பிடித்துள்ளார்.

இதன்படி பியகமவில் உள்ள தொழிற்சாலையொன்றிலேயே  பணத்தை அச்சடித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவையான அளவுக்கு ரூபாவை அச்சடிக்க முடியுமென குறிப்பிட்ட முன்னாள் அரசதலைவர், டொலர்களை அச்சடிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை தற்போது வேறு பல நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய அரசாங்கத்தின் முறையான முகாமைத்துவம் இன்மையே இதற்கான பிரதான காரணம் எனவும் அவர் சாடியுள்ளார்.