பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!

ஜூன் 20ஆம் திகதியன்று பொதுத்தேர்தலை நடத்த முடியாமல் போகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.எனவே உயர்நீதிமன்றத்தின் ஆணையின்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார் என ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.இது தொடர்பில் அவர் மேலும் கூறும் போது; கடந்த வாரம் கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு இதற்கான முடிவை எடுத்தது. இந்த நிலையில் ஆணைக்குழு நாளை மறுநாள் மற்றும் ஒரு சந்திப்பை நடத்தவுள்ளது.நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் பிரச்சாரங்களுக்காக 35 நாட்கள் அவசியமானவை.இதன்படி ஜூன் 20 என்ற தேர்தல் திகதி சாத்தியமில்லை என்பது உறுதியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில், பொதுத்தேர்தல் பெரும்பாலும் ஜூலை முதல் வாரத்தில் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.