நட்சத்திர ஹோட்டல்களில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பயன்படுத்தப்படும் விறகு அடுப்பு

கொழும்பில் உள்ள முன்னணி நட்சத்திர ஹோட்டல்களில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவு சமைப்பதற்கு விறகு அடுப்புகள் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன.

தற்போது நாடு முழுவதும் நிலவி வரும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நட்சத்திர உணவகங்கள் விறகு அடுப்புகளில் சமைக்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த எரிவாயு தட்டுபாடானது மேலும் இரண்டு முதல் மூன்று வாரங்கள் நீடிக்கும் என எரிவாயு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.