1995ல் வாங்கிய மாவு பாக்கெட்!… தற்போது உணவு சமைத்து சாப்பிட்டவர் என்ன ஆனார் தெரியுமா?

1995ம் ஆண்டு வாங்கிய மாவு பாக்கெட்டை பயன்படுத்தி பெண் ஒருவர் உணவு தயாரித்து சாப்பிட்ட சம்பவம் நடந்துள்ளது.வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இந்த லாக் டவுன் நேரத்தில் தன்னுடைய வீட்டை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது அவருக்கு ஒரு மாவு பாக்கெட் கண்ணில் பட்டுள்ளது. அதை எடுத்து எப்போது வாங்கியது என்று பார்த்துள்ளார். அதில் 1995ம் ஆண்டு என்று போடப்பட்டு இருந்தது.பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய அந்த பாக்கெட் எப்படியோ சமைக்காமல் தவறி போய் உள்ளது. இந்நிலையில் அதை பார்த்த அவருக்கு அதில் உணவு சமைத்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.

இதை அவரின் மகனிடம் தெரிவித்துள்ளார். மகன் என்ன சொல்வது என்று தெரியாமல் உங்கள் இஷ்டம் என்று தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து அவர் அந்த மாவு பாக்கெட்டை வைத்து ஆப்பிள் மற்றும் ஸ்ட்ராபெர்ரி பழங்களை வைத்து புதுவிதமான உணவினை சமைத்துள்ளார்.

சமைத்த உணவினை மகன் ஒருபுறம் வீடியோ எடுக்க மறுபுறம் அவர் சாப்பிட்டுள்ளார். அவரின் முயற்சியை சிலர் பாராட்டினாலும், பலர் இதே போன்று ஒரு முயற்சியை மறுபடியும் செய்யாதீர்கள் என்று அறிவுரை கூறியுள்ளார்கள்.அந்த உணவை சாப்பிட்ட அவருக்கு எந்த உடல்நலப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.