ஒமிக்ரோன் வைரஸை விட அதிக நோய் தொற்றை ஏற்படுத்தும் புதிய வகை கொரோனா வைரஸ் பிரான்ஸில் கண்டுபிடிப்பு!

ஒமிக்ரோன் வைரஸை விட அதிக நோய் தொற்றை ஏற்படுத்தும் புதிய வகை கொரோனா வைரஸ், பிரான்ஸில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமிக்ரோன் தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது.

இந்த நிலையில், பிரான்ஸில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. B.1.640.2 என்று பெயரிடப்பட்டு IHU என அழைக்கப்படும் அந்த வைரஸை பிரான்ஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆபிரிக்க நாடான கமரூனில் இருந்து பிரான்ஸின் Marseille நகருக்கு வந்த 12 பேருக்கு இந்த புதிய வகை உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

இந்த வைரஸ் 46-க்கும் மேற்பட்ட பிறழ்வுகளைக் கொண்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய வகை கொரோனா இதுவரை மற்ற நாடுகளில் கண்டறியப்படவில்லை என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.