இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

இலங்கையில் இன்றைய தினம் மேலும் 620 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு நேற்றைய தினம் (03)  18  பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5இலட்சத்து 88 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 055 ஆக பதிவாகியுள்ளது.

இலங்கையில், கொரோனாவில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 143 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5இலட்சத்து 61ஆயிரத்து 271 ஆக அதிகரித்துள்ளது.