கொரோனா வைரஸ் தொற்று! இன்று மாலை வரையான இலங்கையின் நிலை..!

உலகின் பல நாடுகளை ஆட்கொண்டுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் இன்று மாலை ஐந்து மணி வரையான இலங்கையின் நிலைமை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்,

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை – 146
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை – 126
மருத்துவனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை – 231
தேறியோர் மற்றும் குணமடைந்து வெளியேறியோர் – 18
இறப்புகள் – 2 என தெரிவிக்கப்பட்டுள்ளது.