யாழில் மீண்டும் வெடித்தது எரிவாயு அடுப்பு!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மீசாலையில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துச் சிதறிய சம்பவம் ஒன்று இன்று மாலை பதிவாகியுள்ளது.

மாலை வேளையில் சமையலில் ஈடுபட்டிருந்த வேளையில் எரிவாயு சமயல் அடுப்பு வெடித்துள்ளது.

இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.