கடந்த ஆறு ஆண்டுகளில் சிறுவர் வன்முறைகள் 19,768 சம்பவங்கள் பதிவு!

கடந்த ஆறு ஆண்டுகளில் சிறுவர் வன்முறைகள் தொடர்பான 19,768 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஆண்டு சிறுவர் மீதான வன்முறைகள் தொடர்பில் 3,373 முறைப்பாடுகள் எமக்கு கிடைத்துள்ளது.

அவற்றில் 598 முறைப்பாடுகள், 5 வயதிற்கும் குறைந்த சிறுவர்கள் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பானவை, அவர்களில் 252 பேர் சிறுமிகள் ஆவார்.

வன்முறைக்கு உள்ளான சிறுவர்களில், 1,342 பேர் தமது தந்தையாலும், 718 பேர் தாயாலும் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களினால், சிறுவர்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பான 98 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

2015 முதல் 2020 வரையான காலப்பகுதியில், சிறுவர் வன்முறைகள் தொடர்பில் தொடர்பில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 16,395 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.