காலில் ஆணி என்பது தாங்க முடியாத அவஸ்த்தை..! இதற்கு உடனடி தீர்வு இருக்கிறது இதோ…!!

உடல் அழுத்தம், காலில் செருப்பு அணியாமல் நடப்பது, கால் ஆணி உள்ளவர்களின் செருப்பை பயன்படுத்துவது போன்ற காரணத்தினால் காலில் சிறு கொப்புளங்கள் உண்டாகும், இதை கால் ஆணி என்று கூறுவார்கள்.

இந்த கால் ஆணி பிரச்சனைக்கு முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், அவை அல்சராக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

கால் ஆணியை குணப்படுத்துவது எப்படி?பூண்டை நசுக்கி அதன் சாற்றை காலில் ஆணி உள்ள இடத்தில் இரவு உறங்கும் முன் தடவி, துணியால் கட்டுப் போட்டு காலையில் எடுக்க வேண்டும். இம்முறையை ஒரு வாரம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மல்லிகைச் செடியின் இலையை இடித்து, சாறு எடுத்து அதை பாதத்தில் பற்று போட்டு வந்தால், பாதத்தில் கால் ஆணி பரவாமலும் விரைவில் கால் ஆணியை குணமாக்கலாம்.மஞ்சள் மற்றும் வசம்பு ஆகியவற்றில் ஒரு துண்டுடன், மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்கு அரைத்து, அதை கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் தடவி வர கால் ஆணி மறையும்.