காபி, டீ குடிப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா?

பொதுவாக காலை எழுந்ததும் பலர் கட்டாயம் காபி குடிப்பதை விரும்புவார்கள். காபி குடிக்காவிட்டால் அந்த நாளே ஓடாது என்று சொல்லுவார்கள்.

காபி ஒரு நபரின் ஆரோக்கியத்திற்கு நிறைய நன்மை பயக்கிறது மற்றும், அந்த நபரை புதியதாகவும், புத்துணர்வுடனும் வைத்திருக்கிறது.

காபியின் வாசனை ஒரு நபரை வசீகரிக்கிறது. இதன் சுவை கசப்பானது என்றாலும், இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதில் சில நன்மைகளும் உண்டும். இருப்பினும் இதனை அதிகளவு பயன்படுத்தும் ஆபத்தை தான் தரும். தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

நன்மை இருக்கா?

  • காபி குடிப்பதால் அல்சைமர், பார்கின்சன்ஸ், இதய நோய், ஈரல் நோய், கீல்வாதம், நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் சொல்கிறார்கள்.
  • மூளை நரம்புகளில் அடினோசினின் ஆதிக்கத்தை காபீன் குறைப்பதால் மனஅழுத்தம் குறையும். ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குச் சரியான அளவில் டீ குடித்து வந்தால், அவருடைய எலும்புகள் மற்றவர்களைவிட உறுதியாக இருக்குமாம்.
  •  ரத்தஅழுத்தம் கட்டுக்குள் இருக்கும். புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணிகளையும் டீ குடிப்பதால் குறையலாம்.

 பக்கவிளைவு? 

  • அளவுக்கு அதிகமாகக் காபி குடிப்பதால் ரத்தத்தில் இருக்கும் இரும்புச்சத்தின் அளவு குறைந்து ரத்தசோகை ஏற்படலாம்.
  • இன்னும் சிலருக்கு சரியான நேரத்தில் காபி குடிக்கவில்லை என்றாலே பதற்றம் உண்டாகும். இதுவும் ஒரு வகை நோய்தான்.
  • இதனை அதிகளவு எடுத்து கொள்ளும் போதும் எலும்பின் உறுதியைப் பாதிக்கிறது.