சகோதரர் மகிந்த ராஜபக்சவை நீக்கிவிட்டு தன்னை பிரதமராக்க வேண்டும் – தம்பி பிரச்சாரம்

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தன்னை பிரதமராக்க வேண்டும் என்ற பிரசாரத்தை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது சகோதரர் மகிந்த ராஜபக்சவை நீக்கிவிட்டு தன்னை பிரதமராக்க வேண்டும் என நிதியமைச்சர் அரசாங்கத்திற்குள் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை பசில் ராஜபக்ச அமெரிக்கா சென்றிருந்த நிலையில் கடந்த முதலாம் திகதி நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.