மீண்டு அதிகரிக்கிறது கோவிட் மரணங்களின் எண்ணிக்கை!

இலங்கையில் கோவிட் பெருந்தொற்று மரணங்களின் எண்ணிக்கை பதினைந்தாயிரத்தை கடந்துள்ளது.

நேற்றைய தினம் பதிவான மேலும் 24 கோவிட் மரணங்களுடன் இலங்கையின் மொத்த கோவிட் மரணங்கள் 15019 ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த 1ம் திகதி பதிவான 24 மரணங்கள் பற்றிய விபரங்களை நேற்றைய தினம் சுகாதார அமைச்சு வெளியிட்டிருந்தது.

20 ஆண்களும் நான்கு பெண்களும் இவ்வாறு கோவிட் பெருந்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.