2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள் இப்படிதான் இருப்பார்களாம்

இவர்கள் விதி எண் 2-ஆக அமையப் பெற்றவர்கள், பெயர் எண் 2-ஆக அமையப் பெற்றவர்கள், கடக ராசி, கடக லக்னக்காரர்கள், ரோகிணி, ஹஸ்தம், திருவோண நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள்.

சாதக பலன்கள்

இவர்களுக்கு சந்திரன் ஆட்சி, உச்ச, மூலத்திரிகோண ஸ்தானங்களில் இருப்பது நல்லது. சந்திரன் தனித்து நில்லாமல் சுபக்கிரகங்களின் சேர்க்கையோ, பார்வையோ பெற்றிருப்பது சிறப்பாகும். சந்திரனின் ஆதிபத்திய விசேஷமுள்ள சுபக் கிரகங்களின் சாரத்தில் இருப்பது சிறப்பாகும்.

இதனால் சந்திரனின் பலம் கூடும். இதயத்துக்கும் இடது கண் பார்வைக்கும் மனதுக்கும் சந்திரன் காரகர் ஆவார். இவரது பலம் பெற்றவர்களுக்கு விசேஷமான நன்மைகள் உண்டாகும். தாய் பராசக்தியின் அருள் பெற்றவர்கள் என்று இவர்களைச் சொல்லலாம். எதற்கும் உணர்ச்சிவசப் படுபவர்கள். நற்பெயரும் புகழும் உண்டாகும். அழகான முகம் அமையும். தாய்ப் பாசம் அதிகம் இருக்கும். அரசு ஆதரவு கிடைக்கும். செல்வம் சேரும். பயணத்தில் நாட்டம் அதிகம் இருக்கும். ஜலப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். மன நிலை நன்கு அமையும்.

பாதக பலன்கள்

சந்திரன் தேய்பிறையாக அமைந்தாலும், நீசம், பகை பெற்று இருந்தாலும், பாபக்கிரகங் களுடன் சேர்ந்தோ, பாபக் கிரகங்களின் மத்தியிலோ இருந்தாலும் பலம் குறைந்தவர் ஆவார். குறிப்பிட்ட ஜாதகர்களுக்கு மனநிலை பாதிக்கும். தூக்கம் கெடும். பயம் உண்டாகும். பெண்களால் சங்கடம் ஏற்படும்.

பலன் தரும் வழிபாடுகள்

சந்திர பலம் குறைந்தவர்கள் வெள்ளை அல்லி மலர்களைச் சந்திரனுக்கு அணி வித்து வணங்கலாம். தியானம், யோகா செய்யலாம். வெள்ளை நிற வஸ்திரத்தை அணிவிக்கலாம். நெய்கலந்த பால் பாயசம் நைவேத்யம் செய்து தானும் உண்டு பிறருக்கும் அளிக்கலாம். பெளர்ணமி கிரிவலம் நல்லது.

திங்கட்கிழமைகளில் சிவனாருக்கு பால் அபிஷேகம் செய்யலாம். திங் களூர் சென்று மாலை வேளையில் சந்திரனை வழிபடலாம். திருப்பதி மலையின் மேல் உள்ள பாபநாச (சந்திர தீர்த்தம்) தீர்த்தத்தில் நீராடி, திருவேங்கடவனைத் தரிசிப்பது நல்லது.