மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரை இழுத்துச் சென்ற முதலை!

மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரை நேற்றைய தினம் முதலையொன்று கடுமையாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாமம் தாலிபோட்டாற்றில் இடம்பெற்றதாக பொலிஸார் கூறியுள்ளனர். சமபவத்தில் மண்டானை திருக்கோவில் 4 பிரிவைச் சேர்ந்த 55 வயதான இராசநாயகம் விநாயகமூர்தி என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.