ஆக்ஸ்பேட் கோவிட்19 தடுப்பூசி 2ம் கட்டம் வெற்றி..!! சாதனை படைத்த தமிழ் பெண் மருத்துவரின் அணி..!! செப்ரெம்பரில் சந்தைக்கு வரும் தடுப்பூசி..!!

ஆக்ஸ்பேட் பல்கலைக் கழக விசேட மருத்துவக் குழு ஒன்று, கொரோனாவுக்கான தடுப்பூசி ஒன்றை கண்டு பிடிப்பதில் பல மாதங்களாக ஆராட்சிகளை நடத்தி வந்தது. இதில் 1ம் கட்டம் வெறியடைந்துள்ள நிலையில், அதனை மனிதருக்கு ஏற்றி பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்த 2ம் கட்ட பரிசோதனையின் முடிவுகள் நல்ல பயனை தந்துள்ளதாக சற்று முன் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பிரித்தானிய அரசு 130 மில்லியன் பவுண்டுகளை அவர்களுக்கு வழங்கி, 30 மில்லியன் தடுப்பூசிகளை உடனே தயாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக அறியப்படுகிறது.
மருத்துவர் சந்திரா என்னும் பெண் மருத்துவ விஞ்ஞானி ஒருவரும் இந்த ஆக்ஸ்பேட் குழுவில் இருக்கிறார். இவர் இந்திய வம்சாவழி மருத்துவர் ஆவார். இவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அடுத்த கட்ட பரிசோதனை ஒன்றே பாக்கி என்றும்,அதுவும் வெற்றிகரமாக முடிந்தால், தடுப்பு ஊசிகள் செப்டெம்பர் மாதம், சந்தைக்கு வந்து விடும் என்றும், அப்படிப் பார்த்தால் உலகிலேயே கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டு பிடித்த முதல் நாடாக, பிரித்தானியா இருக்கும் என்றும் கூறியுள்ளார்.இதனால், சீனாவை பின் தள்ளி பிரித்தானிய விஞ்ஞானிகள் உயிரியல் தொடர்பான விடையங்களில் முன் நிலை வகிப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இனி என்ன வைரசை சீனா அனுப்பினாலும், அதனை சமாளிக்க வல்ல நாடாக பிரிட்டன் மாறியுள்ளது.