மடு பகுதியில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்து! இருவர் படுகாயம்

மடு பகுதியில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மதவாச்சி வீதியூடாக முச்சக்கரவண்டி சென்று கொண்டிருந்த போது மடு பகுதியினை அண்மித்த நிலையில் முச்சக்கரவண்டியின் எதிர்திசையில் வந்த டிப்பர் வாகனம் முச்சக்கரவண்டியினை முந்திச்செல்ல முற்பட்டது. இதன் போது முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியினை விட்டு கீழிறங்கி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட இருவர் காயமடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.