கோதுமை ரவையில் கருப்பட்டி பாயாசம் செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்

தீபாவளியை முன்னிட்டு சுவையான கோதுமை ரவை கருப்பட்டி பாயாசம் எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம். 

தேவையான பொருட்கள்

  • தேங்காய் துருவல் – அரை கப்
  • கருப்பட்டி – முக்கால் கப்
  • முந்திரி, திராட்சை – தேவையான அளவு
  • சுக்கு பொடி – ஒரு சிட்டிகை
  • ஏலக்காய் பொடி – ஒரு சிட்டிகை
  • காய்ச்சிய பால் – ஒரு டம்ளர்
  • நெய் – தேவையான அளவு

செய்முறை

  • வாணலியில் நெய்விட்டு உருகியதும், முந்திரி, உலர்ந்த திராட்சை, தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  • அதே வாணலியில், கோதுமை ரவை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
  • ரவை வறுப்பட்டதும் 4 கப் வெந்நீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் கருப்பட்டியுடன், தண்ணீர் சேர்த்து நன்றாக கரைக்கவும்.
  • கோதுமை ரவை நன்றாக வெந்ததும், கருப்பட்டி ஜீரா சேரத்து கிளறிவிடவும்.
  • கோதுமை ரவையுடன், கருப்பட்டி சேர்ந்து வெந்ததும் சுக்குப் பொடி, ஏலக்காய்ப் பொடி, வறுத்து வைத்த முந்திரி கலவையை சேர்க்கவும்.
  • இறுதியாக, பால் சேர்த்து கொதி வந்ததும் இறக்கவும். சுவையான கோதுமை ரவை கருப்பட்டி பாயாசம் ரெடி..!.