சீன தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ எதிர்வரும் ஜனவரி 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின்போது, சீனாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு விழாவை ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் தூதரகம் அறிவித்துள்ளது.

அத்துடன் புத்தாண்டில் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணத்தின் கடைசி இடமாக கொழும்பு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.