யாழில் மற்றுமொரு கொரோனா நோயாளி கண்டுபிடிப்பு..!! மொத்த எண்ணிக்கை146 நோயாளிகளாக அதிகரிப்பு..!!

கொரோனா நோயாளர்கள் மேலும் மூவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.இன்று அடையாளம் காணப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், குருணாகலை, மருதானை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிய வருகிறது.

யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்ட நபர் மத போதகர் என்றும் அவர் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரியவருகிறது.மொத்த எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ள போதிலும் 18 பேர் பூரணமாக குணமடைந்து வீடு சென்றுள்ளனர். மேலும் 126 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.