அரச பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்

அரச பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு விசேட அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களை மீண்டும் கடமைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 3ம் திகதி முதல் அனைத்து அரச பணியாளர்களும் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அரச சேவைகள், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் இது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று நிலைமைகளினால் பல அரச நிறுவனங்களினால் பணியாளர் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டிருந்தது.

எனினும், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச பணியாளர்கள் முழு அளவில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க சேவைகள் அமைச்சின் செயலாளர்  ஜே.ஜே.ரட்னசிறி (J.J. Rathnasiri) தெரிவித்துள்ளார்