கருப்பு திராட்சை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா? வாங்க என்னவென்று பார்ப்போம்

பொதுவாக திராட்சை. திராட்சை அனைவருக்குமே பிடித்த ஓர் பழமும் கூட. இதை பழங்களின் ராணி என்றும் அழைப்பர். திராட்சையில் மூன்று வகைகள் உள்ளன. அதில் கருப்பு, சிவப்பு மற்றும் பச்சை நிறம் என நிறங்களின் அடிப்படையில் மூன்று வகையான திராட்சைகள் உள்ளன.

மூன்று வகை திராட்சைகளுமே ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்களை உள்ளடக்கியவை. இருப்பினும் பெரும்பாலானோர் கருப்பு நிற திராட்சையையே அதிகம் விரும்பி சாப்பிடுவர்.

ஏனெனில் கருப்பு திராட்சையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. கருப்பு திராட்சை சாப்பிடுவதால் நம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

அந்தவகையில் தற்போது கருப்பு திராட்சை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • கருப்பு திராட்சை முதுமையில் தாக்கும் அல்சைமர் நோயில் இருந்து பாதுகாக்கும்.மேலும் கருப்பு திராட்சை மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் நரம்பு செல்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
  • கருப்பு திராட்சையில் உள்ள வளமான அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம். எனவே உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாது என்று நினைத்தால் கருப்பு திராட்சையை தினமும் சாப்பிடுங்கள்.
  • கருப்பு திராட்சை வயிற்றில் ஏற்படும் எரிச்சல், வயிற்று உப்புசம், அஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுத்து, உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமாக உதவும்.
  • கருப்பு திராட்சையை தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், அது யூரிக் அமில அளவைக் குறைத்து, சிறுநீரகங்களில் கொடுக்கப்படும் அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும் மற்றும் இதய அமைப்பில் இருந்தும் அமிலங்களை வெளியேற்றும்.
  •  கருப்பு நிற திராட்சையில் உள்ள அதிகளவிலான சர்க்கரை, செல்லுலோஸ் மற்றும் ஆர்கானிக் அமிலம் போன்றவை வயிற்றை ஒரு நல்ல அமைப்பில் வைத்து, அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து, கழிவுகள் எளிதில் உடலில் இருந்து வெளியேற உதவும்.
  • கருப்பு திராட்சையைக் கொண்டு ஜூஸ் தயாரித்து, காலையில் குடியுங்கள். இது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தி, அடிக்கடி வரும் ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுவிக்கும்.
  • தினமும் ஒரு டம்ளர் கருப்பு திராட்சை ஜூஸ் அல்லது ஒரு கையளவு கருப்பு திராட்சையை சாப்பிட்டு வந்தால், கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
  •  கருப்பு திராட்சை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதனை தினமும் ஒரு கையளவு சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வருவது நல்லது.