ஆண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன தெரியுமா? மீறி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

ஆரோக்கியமான உடல்நலத்தை பேண ஆண்கள் சில உணவுகள் சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

சோயா பொருட்கள்

சோயா தயாரிப்புகளில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் என்றால் என்ன? அவை தீங்கு விளைவிக்குமா? பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் அடிப்படையில் தாவரங்களில் இருந்து வரும் ஈஸ்ட்ரோஜன் போன்ற கலவைகள். பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் அதிக அளவில் உட்கொள்வது உடலின் ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும் என்று விஞ்ஞானிகள் கவலைப்படுகிறார்கள். 99 ஆண்களைக் கொண்டு இது தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, அதிகப்படியான சோயா உட்கொள்ளல் விந்தணுக்கள் எண்ணிக்கையை குறைக்கும் என தெரியவந்துள்ளது.

டிரான்ஸ் கொழுப்புகள்

பொதுவாக, டிரான்ஸ் கொழுப்புகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகிறது. டிரான்ஸ் கொழுப்புகள் வறுத்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளில் காணப்படுகின்றன. அதாவது இதயநோய் அபாயம், விந்தணு குறைபாடு போன்றவை இது போன்ற உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அனைத்து வகையான நோய்களுக்கும் தொடர்பு கொண்டுள்ளது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது போன்ற இறைச்சிகள் அதிகம் உண்டால் விந்தணு குறைபாடும் ஏற்படலாம். ஆனால் இது அந்தளவுக்கு ஆய்வுகளில் முழுமையாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை.