யாழ்.தொல்புரத்தில் பட்டப்பகலில் வீடு உடைத்து கொள்ளை!

யாழ்.தொல்புரம் பகுதியில் பட்டப்பகலில் வீடொன்றை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த சுமார் 71/4 தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த வீட்டில் வசிக்கும் நபர் சாரதியாக பணிபுரிகின்றனர். இந்நிலையில் அவர் நேற்று வேலை நிமித்தமாக வெளியே சென்றிருந்தார்.

 

அவரின் தாயார், மகனின் மனைவியை உறவினர்கள் வீட்டில் விட்டுவிட்டு வங்கியில் பணம் எடுப்பதற்காகச் சென்றிருந்தார். இந்நலையில் அருகிலிருந்த வீட்டுக்காரர்கள் குறித்த வீட்டு உரிமையாளருக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு

“உங்கள் வீட்டில் நாய் குரைத்தது.ஆகையால் நாங்கள் உங்களது வீட்டைப் பார்த்தபோது இருவர் உங்களது வீட்டிலிருந்து வெளியே ஓடினர்” என்று கூறினர். இதனைக்கேட்ட அந்தப்பெண் வீட்டிற்கு வந்து பார்த்தபோது

வீடு உடைத்து நகை களவாடப்பட்ட விடயம் தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து வீட்டுக்காரர்களால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது.திருடர்களைப் பிடிப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.