பொலிஸ் உத்தியோகஸ்த்தர் என கூறி பாடசாலை அதிபரிடம் பணம் பறித்து வந்த இளைஞர் அதிரடி கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் என கூறி பாடசாலை அதிபர் ஒருவரை மிரட்டி தொடர்ச்சியாக பணம் பறித்துவந்த 23வயது இளைஞளை பொலிஸார் பைக்கோடு கைது செய்யப்பட சம்பவம் ஒன்உ பதிவாகியுள்ளது.

அதிபரின் வாகன வரிசிட்டை மற்றும் லைசென்ஸ் என்பவற்றை பறித்து வைத்து பணம் கறந்த சம்பவம் கடந்த சில நாட்களின் முன் பதிவாகி உள்ளது. இதனையடுத்து பாடசாலை அதிபரிடம் தான் பொலீஸ்காரன் எனசொல்லி பல தடவைகள் குறித்த இளைஞர் பணம் பெற்ற நிலையில், சுமார் 138 000 ஆயிரம் ரூபா பணத்தினை அதிபர் இழந்துள்ளார்.

இளைஞரின் நடவடிக்கை தொடர்ந்ததால் அதிபர் முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பந்தப்பட்ட அதிபரை விசாரித்தபோது இந்த சம்பவம் ஒரு பண மோசடி என தெரிய வந்தது.

அதன் பின்னரும் , குறித்த இளைஞன் மறுபடியும் அதிபருக்கு போன் பண்ணி பணம் கேட்டநிலையில், அதிபர் அது குறித்து பொலிஸாரிடம் கூறிய நிலையில் , பொலிஸார் சிவில் உடையில் இளைஞனை பிடிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

இதனையடுத்து அதிபர் இளைஞனை புதுக்குடியிருப்பு சந்திக்கு வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார். பணத்தை பெற பைக்கில் புதுக்குடியிருப்பு சந்திக்கு வந்த இளைஞரை சிவில் உடையில் இருந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் இளைஞனை பைக்கோடு தூக்கி பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு இளைஞரிடம் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர் சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் புதுக்குடியிருப்பு 9 ஆம் வட்டாரம் மல்லிகைத் தீவில் வசிக்கும் 23 அகவையுடைய இளைஞனே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.