உங்க முகத்தில் சருமத்துளைகள் அதிகமாக இருக்கா? இதோ சூப்பர் டிப்ஸ்

பொதுவாக சருமத்துளைகள் பார்க்க சிறு குழி போன்று இருக்கும். இது எண்ணெய் சருமத்துடன் இணைந்தவர்களில் பொதுவானது.

சருமத்தோல் திறந்திருக்கும் நிலையில் முகம் மந்தமாகவும், சோர்வாகவும் இருக்கும். இந்த துளைகளுக்குள் அழுகுகள் சென்று அடைத்துவிடவும் செய்யும்.

இதனால் அங்கிருந்து பருக்கள், பிளாக் ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகளோடு சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பும் உண்டாக கூடும்.எனவே இவற்றை ஆரம்பத்திலே போக்குவது நல்லது.

இதனை ஒரு சில இயற்கை பொருட்கள் கொண்டு கூட சரி செய்யலாம். அந்தவகையில் தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • முதலில் பழுத்த பப்பாளி துண்டுகளை நன்றாக மசித்து கொள்ளுங்கள். அரை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இது சருமத்தை சுத்தம் செய்கிறது. திறந்த துளைகளை சுத்தம் சரும பிரச்சனைகளை அடியோடு போக்க உதவுகிறது.
  • முட்டையின் வெள்ளைக் கருவையும் ஓட்ஸ்யையும் ஒன்றாக கலந்து முகத்தில் அப்ளே செய்து கொள்ளுங்கள்.பிறகு நன்றாக உலர விடுங்கள். பிறகு அதை நன்கு தேய்த்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இது உங்க முகத்தில் உள்ள தேவையற்ற எண்ணெய் பிசுக்கை நீக்கி திறந்த சரும துளைகளையும் சுத்தம் செய்கிறது .
  • கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும். இந்த ஜெல்லை உங்க முகத்தில் அப்ளே செய்து வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு முகத்தை சாதாரண நீரில் கழுவிக் கொள்ளுங்கள். திறந்த சரும துளைகளில் உள்ள எண்ணெய் பிசுக்கு, அழுக்கு போன்றவை எளிதில் நீக்கப்பட்டு சுத்தமாகி விடும். இதை நீங்கள் தினமும் முயற்சி செய்து வரலாம்.
  • ஐஸ் கட்டிகளை ஒரு சுத்தமான துணியில் கட்டிக் கொள்ளுங்கள். இந்த ஐஸ் கட்டிகளை சில நிமிடங்கள் திறந்த துளைகள் உள்ள இடத்தில் வைத்து ஒத்தடம் கொடுங்கள். இந்த ஒத்தடம் திறந்த துளைகளை மூட உதவி செய்யும்.