பூநகரி பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி பொறுப்பேற்பு

கிளிநொச்சி – பூநகரி நிலையத்திற்கான புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

கொழும்பு சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் பொலிஸ் பரிசோதகராகக் கடமையாற்றிய எல்.ஜி.என் அசிரி கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பொலிஸ் நிலையத்திற்கான புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.

குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி இன்று சுப நேரத்தில் உத்தியோகப்பூர்வமாகக் கடமை ஏற்றுள்ளார். சர்வமத வழிபாடுகளைத் தொடர்ந்து குறித்த பதவி ஏற்பு நிகழ்வு நடைபெற்று உள்ளமை குறிப்பிடத்தக்கது.