பல்வேறு தடைகளையும் தாண்டி பெருமளவு பொதுமக்களின் பங்கேற்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்..!

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் பொலிஸ், புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்று காலை 10.30 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் ஏற்பாட்டு குழுவால் முன்னெடுக்கபட்டு வருகின்றது .இதன்படி 10.30 மணிக்கு பொது சுடர் ஏற்றப்பட்டு , அகவணக்கம் செலுத்தப்பட்டு பிரகடன உரை நிகழ்த்தபட்டுள்ளது.முள்ளிவாய்க்காலில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில்….பொறுப்பக்கூறல் பொறிமுறை முன்னெடுக்கப்பட ஒட்டு மொத்தத் தமிழினமும் தனது வளங்களைத் திரட்டிச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது சிறப்பு குற்றவியல் தீர்ப்பாயப் பொறிமுறையினூடோ நடந்த இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என முள்ளிவாய்க்கால் பிரகடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அதில்..
இந்நிலையில், முள்ளிவாய்க்கால் தோறும் இராணுவ பொலிஸ் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.நினைவேந்தல் வளாகத்துக்கு அண்மையாக பொலிஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகளை இழந்தவர்கள், கண்ணீர் விட்டும், கதறியும், முள்ளிவாய்க்கால் மண்ணில் அழுது புரண்டு தமது ஆற்ற முடியாத் துயரை வெளிப்படுத்தியிருந்தனர்.