அருட்தந்தையர்கள் பயணித்த காரை வழிமறித்து அடித்து நொருக்கிய ரவுடிகள்.

அருட்தந்தையர்கள் பயணித்த காரை வழிமறித்து அடித்து நொருக்கிய 10 பேர் கொண்ட ரவுடி கும்பல் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் 27ம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் அருட்தந்தையர்கள் தெரிவிக்கையில், நத்தார் ஒன்றுகூடல் நிகழ்வு முடித்து அதில் கலந்துகொண்ட ஏழு அருட்தந்தையர்களில்

ஒருவரை தவிர ஏனையவர்கள் தங்களின் அருட்தந்தையர்களுக்குரிய ஆடைகளுடன் கார் ஒன்றில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது சுமார் 10 பேர் கொண்ட இளைஞர் குழுவொன்று மதுபோதையில் மயில்வாகனபுர வீதியில்

காரை மறித்து பணம் கோரினர், அருட்தந்தையர்கள் மறுப்புத் தெரிவித்தபோது அவர்கள் பயணித்த வாகனம் அடித்து உடைக்கப்பட்டதோடு, அருட்தந்தையர்கள் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ள்ப்பட்டபோதும்

அவர்கள் தங்களை பாதுகாத்துக்கொண்டதாகத் தெரிவித்தனர். இது தொடர்பில் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்

தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளதாகவும் அருட்தந்தையினர் குறிப்பிட்டனர். மேலும் அருட்தந்தையர்கள் தங்களது ஆடைகளுடன் உள்ள போதே அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அவதூறாக பேசியமை மிகுந்த கவலையினை ஏற்படுத்துவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.