முதலாம், இரண்டாம் கொவிட் தடுப்பூசிகளை பெறாத பொதுமக்களுக்கான அறிவித்தல்!

ஹப்புத்தளை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இன்று முதலாம், இரண்டாம் கொவிட் தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

முற்பகல் 9.30 முதல் ஹப்புத்தளை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என பதுளை மாவட்ட பொதுச் சுகாதார சங்கத்தின் உப செயலாளர் எஸ். சுதர்சன் தெரிவித்துள்ளார்.

இதுதவிர, இரண்டு தடுப்பூசிகளையும் ஏலவே பெற்றுக்கொண்டு உரியக் காலத்தைப் பூர்த்தி செய்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் நாளைய தினம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.