இறுதியாக அடையாளம் காணப்பட்ட 21 கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் சற்று முன்னர் வெளியான தகவல்..!

நாட்டில் கொரோனா தொற்றுறுதியான 21 பேர் நேற்றைய தினம் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இதனை அறிவித்துள்ளது. இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 981 ஆக அதிகரித்துள்ளது.இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 19 பேர் கடற்படையினர் என தெரிய வந்துள்ளது.எவ்வாறாயினும் நேற்றைய தினம் கொரோனா தொற்றுறுதியான 18 பேர் குணமடைந்தனர்.இதன்படி குணமடைந்தோரின் எண்ணிக்கை 538 ஆக அதிகரித்துள்ளது.இந்தநிலையில், கொரோனா தொற்றுறுதியான 434 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதேவேளை, நாடு இயல்பு நிலைக்கு திரும்புகின்ற நிலையில், நாளாந்த செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற மக்கள் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என தொற்று நோயியில் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் விசேட மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாவிடின் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.