மீன் லொறி மின்கம்பத்துடன் மோதி விபத்து!

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆஸாத் நகர் சந்தியில் மீன்களை ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆஸாத் நகர் சந்தியில் மீன்களை ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறியொன்று நேற்று (27) விபத்துக்குள்ளாகியுள்ளது.

திருகோணமலையிலிருந்து அம்பாறை நோக்கி மீன்களை ஏற்றிச்சென்ற வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையால் வீதியிலிருந்த மின்கம்பத்தை இடித்துச் சென்று, வீடொன்றின் மீது மோதியுள்ளது.

மின்கம்பத்துடன் வாகனம் மோதியதில் மின்பிறப்பாக்கி சேதமடைந்தமையால், ஆஸாத் நகரில் சில மணி நேரம் மின்தடை ஏற்பட்டிருந்ததாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.