கொட்டக்கலையிலும் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியது!

ஹட்டன் – கொட்டக்கலை கிறிஸ்லஸ் பாம் தோட்டத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (27) பிற்பகல் எரிவாயு அடுப்பொன்று வெடித்துச் சிதறியுள்ளது

குறித்த அடுப்பில் தண்ணீர் சூடேற்றிய போதே இவ்வாறு எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.இந்த விபத்தில் எரிவாயு அடுப்புக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

எரிவாயு வெடிப்பு தொடர்பில் திம்புள்ள – பத்தனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.