பெற்றோரின் அசண்டையீனம்… குழிக்குள் தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்து இரு சிறுமிகள்…!! ஊரே சோகத்தில்…!

பொலனறுவை – பக்கமுன பகுதியில் மாணிக்கக்கல் அகழ்விற்காக தோண்டப்பட்டிருந்த குழியில் வீழ்ந்து இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.

பக்கமுன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்தரகல்லேவ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.சம்பவத்தின் போது 3,7 வயதுடைய இரு சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த சிறுமிகளின் வீட்டுக்கு பின்புறத்தில் மாணிக்கக்கல் அகழ்வுக்காக தோண்டப்பட்டிருந்த குழியில் நீர் நிரம்பியிருந்துள்ளது.இந்த குழிக்குள் விழந்த நிலையிலே குறித்த சிறுமிகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.