யாழ்.தெல்லிப்பளையில்  மரம் வெட்ட சென்ற குடும்பஸ்த்தர் மீது மரம் விழுந்து மரணம்!

யாழ்.தெல்லிப்பழை – சூளாம்பதி கிராமத்தில் மரம் வெட்டிக் கொண்டிருந்த குடும்பஸ்த்தர் மீதே மரம் விழுந்ததில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் தெல்லிப்பழை, சூளாம்பதியைச் சேர்ந்த 41 வயதுடைய எட்வேட் மதிவண்ணன் என்ற குடும்பஸ்தரே உயிழந்துள்ளார்.

மரம் வெட்டும் கூலித்தொழிலாழியாகிய இவர் நேற்றைய தினம் அளவெட்டி, மாசியப்பிட்டி பகுதியில் மரத்தினை கூலிக்காக வெட்டச் சென்றுள்ளார். அப்போது மரத்தை இழுத்து வீழ்த்த முற்பட்ட போது மரத்தினுள் வீழ்ந்து அகப்பட்டுள்ளார்.

இதனால் பலத்த காயமடைந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பயனின்றி நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் நேற்று யாழ்.போதனா வைத்தியசாலை மரண விசாரணைகளின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.