சர்க்கரை நோயால் கஷ்டபடுகிறீங்களா! இதோ உடனடி தீர்வு

பொதுவாக கிராம்பில் கார்மினேடிவ் என்னும் பண்பு இருப்பதால் அது செரிமானம், வாயு பிரச்சனைகளுக்கு உதவியாக இருக்கிறது. அதேபோல் பல் வலி, பல் சொத்தை வாய் துர்நாற்றம் என வாய் சுகாதாரத்தை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

செரிமானமின்மை, பசியின்மை, சளி, இருமல், குமட்டல் போன்ற உபாதைகளுக்கு உரிய தீர்வு வேண்டுமெனில் அதை கிராம்பின் மூலமும் பெறலாம்.

அதே போல் டீயில் இஞ்சி தட்டி போடுவது போல் கிராம்பையும் தட்டி போட்டு குடித்தால் நெஞ்சு எரிச்சல், தலைவலி போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும். அந்தவகையில் சர்க்கரை நோயாளிகள் கிராம்பை இப்படி பயன்படுத்தி பாருங்க..

  • முதலில் கிராம்பை பொடியாக்கி கொள்ளவும். அதன் பிறகு தேவையான அளவு தண்ணீரை கொதிக்க வையுங்கள். கொதிநிலை வரும்போது கிராம்பை தட்டிப்போடுங்கள். பின் டீ தூளை சேர்த்து கொதிக்க வையுங்கள். நன்கு கொதித்து அதன் வாசனை வரும்போது அடுப்பை அனைத்துவிடுங்கள்.

  • இப்போது அதை வடிகட்டி குடிக்கலாம். இதை தினம் காலை குடிக்க உங்கள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம். நீரிழிவு நோய் அல்லாதவர்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க நினைப்பவர்களும் குடிக்கலாம்.
  • கிராம்பில் நீரிழிவு நோய்க்கான அழற்சி எதிர்ப்பு, வலி நிவாரணி, ஆண்டிசெப்டிக் பண்புகள் ஆகியவை இருப்பதால் இது சிறந்த மருந்தாக விளங்குகிறது. அதுமட்டுமன்றி கிராம்பின் எண்ணெய் கூட இன்சுலின் அளவை பராமரிக்க உதவுகிறது.