காதலருடன் ஹொட்டலுக்கு சாப்பிட வந்த நியூஸிலாந்து பிரதமருக்கு ஏற்பட்ட கதி…!!

காபி கிளப்புக்கு தனது காதலருடன் வந்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு உள்ளே உட்கார சீட் இல்லை என்று கூறி ஹோட்டல் நிர்வாகம் திருப்பி அனுப்பியது. இதனை அடுத்து அவர் வெளியே நீண்ட நேரம் நிற்க நேர்ந்தது. இருப்பினும் பின்னர் இடம் கிடைத்ததைத் தொடர்ந்து ஜெசிந்தா தனது காதலருடன் உணவு சாப்பிட்டு விட்டு கிளம்பினார். உலகின் பிற நாடுகளைப் போலவே நியூசிலாந்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 1498 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அதில் 1428 பேர் குணமாகி விட்டனர். 21 பேர் மரணமடைந்துள்ளனர். 49 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நன்றாக கட்டுக்குள் வந்து விட்டதால், அந்த நாட்டில் தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.அதன்படி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் எதையும் மேற்கொள்ளலாம். முகமூடி கட்டாயம். அதேபோல சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற பல கட்டுப்பாடுகள் அங்கே உள்ளது. இதற்கு அமைவாகவே ஹோட்டலில் எத்தனை பேர் உள்ளே அனுமதிக்க முடியும் என்ற கட்டுப்பாடை போட்டதும் பிரதமரே. அதனால் அவரே அவஸ்தைப்பட்டும் உள்ளார்.