கருவளையத்தை போக்க இதோ சில அசத்தலான டிப்ஸ்?

பொதுவாக முகத்தின் அழகைக் கெடுப்பதில் முக்கியமான ஒன்று தான் கருவளையம். அத்தகைய கருவளையம் சிலருக்கு அதிகம் இருக்கும்.

ஆனால் அது எதற்கு வருகிறது என்று பலரும் தெரியாமல் இருக்கும்.

நம்முடைய பழக்கவழக்கங்களே. அந்த ஒரு சில பழக்கவழக்கங்களால் நம் கண்களைச் சுற்றி கருப்பாக தோன்றும். அதுமட்டுமல்லாமல் ஒரு சில நோய்கள் இருந்தாலும் கருவளையமானது வரும்.

அதனை ஒரு சில பொருட்கள் கொண்டு சரி செய்ய முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • சிவப்பு தாமரை இதழ்களை அரைத்து, அதன் விழுதில் ஒரு 25 கிராம், விளக்கெண்ணெய் 25 கிராம், தேன் 10 கிராம் எடுத்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். தினமும் குளிக்கும் முன்பும், இரவு தூங்கும் முன்பும் இதில் சிறிது எடுத்து கண்களைச் சுற்றி பேக் போல தடவி, அரை மணி நேரம் கண்களை மூடி ஓய்வெடுத்து, பிறகு கழுவி விடலாம்.
  • திக்கான கிரீன் டீ டிகாக்ஷன் 10 மில்லி எடுத்து, அதில் 5 கிராம் சுருள் பாசி தூள், 10 சொட்டு லாவண்டர் ஆயில், 10 சொட்டு லெமன்கிராஸ் ஆயில் கலந்து இரண்டு மணி நேரம் திறந்தாற்போல வைக்க வேண்டும். பிறகு, இதை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து, தினமும் குளிக்கும் முன்பும், இரவு தூங்கும் முன்பும் சிறிது எடுத்து கண்களைச் சுற்றி பேக் போல தடவி, அரைமணி நேரம் கண்களை மூடி ஓய்வெடுத்து… பிறகு, கழுவிவிடலாம்.
  • கண்ணுக்கு கீழ் தோன்றும் சதைப் பையை போக்க பாதாம் ஆயில் 2 சொட்டு, விளக்கெண்ணெய் 2 சொட்டு இரண்டையும் கலந்து, கண்ணின் வெளி நுனிப்பகுதியில் ஆள்காட்டி விரலை வைத்து அழுத்தி, வெளிப்பக்கமா இழுத்துப் பிடித்துக்கொண்டு, இன்னொரு கை விரலால் எண்ணெய்க் கலவையைத் தொட்டு, இழுக்கும் திசையில் வெளிப்பக்கமாக மசாஜ் செய்ய வேண்டும். ஒவ்வொரு கண்ணுக்கும் 10 – 15 முறை இப்படி மசாஜ் செய்த பின், இரண்டு கண்களையும் மூடி, ஐஸ் தண்ணீரில் நனைத்த திக்கான பஞ்சை அதன் மேல் வைத்து ஐந்து நிமிடம் கழித்து எடுத்துவிட வேண்டும். தினமும் இருமுறை இதைத் தொடர்ந்து செய்துவந்தால், நாளடைவில் கண் பை குறையும்