க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பாக வெளிவந்த முக்கிய தகவல்

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

கல்வியமைச்சின் இணையத்தளம் மூலமாக (www.doenets.lk) மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை பெற்று, அதனை சமர்ப்பிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

விண்ணப்பப் படிவங்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் மாதிரிகள் தற்போது கல்வியமைச்சின் இணையத்தளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளர்.