வெள்ளை வெங்காயத்தில் இவ்வளவு நன்மையா?

நமது அன்றாட சமையலில் பயன்பாட்டிற்கு வெங்காயம் தவிர்க்க முடியாத ஒன்றாகும். வெங்காயத்தில் சிறியது மற்றும் பெரியது என்று இருவகை உள்ளது.

அதில் வெள்ளை வெங்காயம் என்றும் ஒரு வகை உள்ளது வெள்ளை வெங்காயத்தில் வைட்டமின்-சி, ஃபிளாவனாய்டுகள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் போன்ற பல சத்துக்களை உள்ளடக்கியது. இதனை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்வது நன்மையே தரும்.

தற்போது வெள்ளை வெங்காயம் எடுத்து கொள்வதனால் கிடைக்கும் மருத்துவப்பயன்கள் என்ன என்பதை பார்ப்போம்.

  • அன்றாட உணவில் வெள்ளை வெங்காயத்தை அதிகமாக சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள வெப்பம் குறைகிறது மற்றும் வியர்வையை கட்டுப்படுத்துகிறது.
  • வயிறு மற்றும் குடலில் உள்ள பாக்டிரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது வெள்ளை வெங்காயம்.
  • வெள்ளை வெங்காயம் தினம் தோறும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியே அதிகப்படுத்துகிறது.
  • வெள்ளை வெங்காயத்தில் சோடியம் இருப்பதால் வைரஸ் அனைத்தையும் அளித்து வெளியேற்றுகிறது.
  • அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தமான அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்துகிறது. இதய நோய் உள்ளவர்கள் அன்றாட உணவில் வெள்ளை வெங்காயம் சேர்ப்பதால் இதயம் சம்பந்தமான நோய்கள் குணமாகிறது மற்றும் ஆரோக்கியமான இதய செயல் பாட்டிற்கு வெள்ளை வெங்காயம் பெரிதும் உதவுகிறது.
  • உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் இரத்த உறைவுகளில் இருந்து பாதுகாக்கிறது. வெள்ளை வெங்காயத்தில் உள்ள குரோமியம் மற்றும் சல்பர் போன்ற உள்ளடக்ககள் இரத்த சர்க்கரையை சீராக்க மற்றும் இரத்த சர்க்கரையை குறைக்கவும் வெள்ளை வெங்காயம் உதவுகிறது.