யாழ்.போதனா வைத்தியசாலையில் தீவிர தலைவலியுடன் அனுமதிக்கப்பட்ட பெண் மரணம்!

தலைவலியால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  சிரேஸ்குமார் ஞானசீலி (வயது 37) என்ற பெண்ணே சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.

கடந்த சில தினங்களாக தீவிர தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றய தினம் அவர் உயரிழந்துள்ளார்.