யாழ்.தாவடியில்  வீதியால் சென்ற சிறுவனை கத்தியால் குத்திவிட்டு  சென்ற கும்பல்! 

வீதியால் சென்றுகொண்டிருந்த சிறுவனை கத்தியால் குத்திவிட்டு தொலைபேசியை திருடிச் சென்ற வழிப்பறி கொள்ளை கும்பலை பொலிஸார் தேடிவருகின்றனர்.

குறித்த கொள்ளை சம்பவம் சுன்னாகம் – தாவடி பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றிருக்கின்றது. மருதனார்மடம் பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவன் ஒருவன் தொலைபேசியில் பேசியபடி சைக்களில் சென்றுள்ளார்.

இதன்போது அவ்வழியால் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் குறித்த சிறுவனை கத்தியால் குத்திவிட்டு தொலைபேசியை பறித்து சென்றுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.