எலுமிச்சையை நீரில் கலந்து குடிப்பதால் இவ்வளவு நன்மையா?

எலுமிச்சை வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின், ஃபோலேட், கால்சியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்த சிறந்த மூலம். இது நார்ச்சத்து மற்றும் பைடோ நியூட்ரியண்ட்ஸ் கொண்டுள்ளது. இது ஆரோக்கியத்துக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் துணைபுரிகிறது.

இதனை தினமும் காலையில் பருகுவது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகின்றது. அதுமட்டுமின்றி இதனை உப்புடன் சேர்த்து அருந்துவதும் இன்னும் நன்மையே.

தினமும் இதை காலை வேளையில் தவறாமல் பின்பற்றி வந்தால் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுவோம்.

  •  நீர், எலுமிச்சை சாறு, இரண்டு டீ ஸ்பூன் உப்பு. இவற்றை நன்கு கலந்து குடித்த சில நிமிடங்களிலேயே ஒற்றை தலைவலிக்கு நல்ல தீர்வுக் காண முடியும்.
  • தினமும் காலை எலுமிச்சை நீரில் உப்பு கலந்து பருகுவதால் நாவில் உள்ள எச்சில் சுரப்பிகள் தூண்டிவிடப்படுகின்றன. இது செரிமானத்திற்கு உதவும் முதல் படி ஆகும். இதனால் அஜீரண கோளாறுகளுக்கு தீர்வுக் காண முடியும்.
  • எலுமிச்சை நீரில் உப்பு கலந்து குடிப்பது நரம்பு மண்டலத்தையும் ஊக்குவிக்கிறது. இதனால் இரவு நல்ல உறக்கம் கிடைக்கப் பெறலாம்.
  • எலுமிச்சை நீரில் இருக்கும் சத்துக்களும், உப்பில் இருக்கும் மினரல்ஸ்-ம் உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை போக்க உதவுகிறது.
  • உப்பில் இருந்து கிடைக்கப்படும் முறையான மினரல் சத்துக்கள் இன்சுலின் அளவை சீராக்குகிறது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல பலனளிக்க கூடியது ஆகும்.
  • உப்பில் இருக்கும் எதிர்மறை அயனிகள், சீரற்று இருக்கும் இதய துடிப்பை சீராக்க செய்கிறது, மற்றும் உடலில் எலக்ட்ரோ-கெமிக்கல் செயல்களுக்கு உறுதுணையாக இருக்கிறது.