உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி… கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!

எதிர்வரும் கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சையில் கணிப்பானை உபயோகப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் இந்த வருடம் இடம்பெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சை, சாதாரண தரப் பரீட்சை, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் ஆலோசித்துவருகின்றது.இந்நிலையில், எதிர்வரும் கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையில் கணிப்பானை உபயோகப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.கணக்கியல்,பொறியியல், உயிரியல் தொழில்நுட்பம் ஆகிய பாடநெறிகளுக்காக இந்த கணிப்பானை உபயோகிக்கலாம் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.