இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவிருந்த தொடர் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

நாளை காலை திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிடின் குறித்த தருணத்தில் இருந்து வேலைநிறுத்தம் தொடரும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

பயணச்சீட்டு வழங்காமை மற்றும் போக்குவரத்துக்கான பார்சல்களை பெற்றுக்கொள்ளாமைக்கான தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.