நாட்டில் மேலும் அதிகரிக்கும் கோவிட் மரணங்கள்!

நாட்டில் மேலும் 13 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 04 பெண்களும் , 09 ஆண்களும் உள்ளடங்குவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் 14,884 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது.