சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதில் தொடர்ந்தும் தாமதம்.

சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதில் தொடர்ந்தும் தாமதம் நிலவுகின்றது. எரிவாயு தொடர்பில் மேலதிக பரிசோதனைகள் சிலவற்றை மேற்கொள்வதனால் அதனை விநியோகிக்கும் நடவடிக்கையில் சிறிது தாமதம் ஏற்படக்கூடுமென்று ´லிட்ரோ´ நிறுவனம் அறிவித்துள்ளது.

சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்களை தொடர்ந்து எரிவாயு தரம் தொடர்பில் இலங்கை தரக் கட்டளை நிறுவனத்தினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளுக்கு மேலதிகமாக புதிதாக இன்னும் சில பரிசோதனைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இதேவேளை,எரிவாயு சிலிண்டர்களில் கலவை காட்சிப்படுத்தப்பட்டுள்ள 12.5 கிலோகிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டர்களை 3500 ரூபாவிற்கு விற்பனை செய்யும் மோசடி இடம்பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய  சமையல் எரிவாயு சிலிண்டர் 2765 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற நிலையில், எரிவாயு சிலிண்டர் 3500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.