காட்டு பகுதியில் 600 மாடுகளை மேய்ந்தமைக்காக 5 பேர் கைது.

காட்டு பகுதியில் மாடுகள் புல் மேய்ந்தமைக்கான 600 மாடுகள் கைப்பற்றப்பட்டதுடன் அவற்றின் உரிமையாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் அளுத்கம, 17ஆம் கட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.புத்தளம் வன பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளினால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர் அவர்களை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் மாடுகள் இன்னும் நீதிமன்றத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளன.